UPDATED : பிப் 20, 2013 12:00 AM
ADDED : பிப் 20, 2013 11:30 AM
திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் கவின் கல்லூரிகள் ஆகியவை திரைத்துறை சார்ந்த நகரங்களைச் சுற்றியே அமைந்துள்ளன. அதுவும் குறிப்பாக மும்பையில் அதிக அளவில் அமைந்துள்ளன. பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான சுபாஸ் கை, Whistling woods virtual academy எனும் நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இந்நிறுவனம் மூலம் திரைப்படம், தொலைக்காட்சி, அனிமேசன் மற்றும் கலைத்துறை சம்பந்தமான படிப்புகள் இணையதளம் வழியாக ஆன்லைனில் அளிக்கப்படும்.
சான்றிதழ் படிப்பாக அளிக்கப்படும் இப்படிப்பு "கோர்ஸ்மில்" என்ற இணையதள வழி கல்வி தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படும். வகுப்புகள் ஆன்லைனில் எடுக்கப்படுவதால் விருப்பமான நேரத்தில் கற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான வகுப்புகள் ஹிரிதிக் ரோசன், ஸ்யாம் பெனகல் போன்ற திரைப்பட, தொலைக்காட்சி பிரபலங்களை வைத்து நடத்தப்படும். படிப்பானது திரைக்கதை, தயாரிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றைப் பற்றி இருக்கும். மொத்தம் 120 வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு வகுப்புகளும் 2 மணி நேர கால அளவு கொண்டதாக இருக்கும்.
பயிற்சியின்போது குறைந்தது 36 இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள் குறித்து ஆராயப்படும். வகுப்புகள் ஜூன் மாதத்தில் தொடங்கப்படும். சான்றிதழ் படிப்புக்கான கல்வித்தகுதியாக 12 ஆம் வகுப்பும், கட்டணமாக ரூ.90,000 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.wwivirtualacademy.com என்ற இணையதளத்தை காணவும்.
