தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குறுகியகால மெக்கட்ரானிக்ஸ் பயிற்சி

குறுகியகால மெக்கட்ரானிக்ஸ் பயிற்சி

குறுகியகால மெக்கட்ரானிக்ஸ் பயிற்சி


UPDATED : நவ 28, 2014 12:00 AM

ADDED : நவ 28, 2014 12:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2014 12:00 AM ADDED : நவ 28, 2014 12:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: அழகப்பா பல்கலை., திறன் வளர்ப்பு மையம் சார்பில், குறுகியகால மெக்கட்ரானிக்ஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அழகப்பா பல்கலை திறன் வளர்ப்பு மைய இயக்குனர் தர்மலிங்கம் கூறியதாவது: மெட்ரோ சிட்டியில் சில இன்ஜி., கல்லூரிகளில் மட்டுமே மெக்கட்ரானிக்ஸ் கோர்ஸ் உள்ளது. தற்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் மெக்கட்ரானிக்ஸ் பயன்பாடு பெருகி வருகிறது. நான்கு ஆண்டுகள் இன்ஜினியரிங் கோர்ஸ் மட்டுமே உள்ள நிலையில், காரைக்குடி அழகப்பா பல்கலை ஐ.எல். எப்.எஸ்., திறன் வளர்ப்பு மையம் சார்பில், குறுகிய கால பயிற்சியாக அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக யு.ஜி.சி., நிதி உதவியுடன் ரூ.40 லட்சத்திலான நியூமெட்டிக் ஹைட்ராலிக், டி.சி., ஏ.சி., மோட்டார், ஸ்கேடா, பி.எல்.சி., மிஷின்கள் வாங்கப்பட்டுள்ளன. மூன்று லெவலாக இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. ஒரு பயிற்சிக்கு ரூ.15 ஆயிரம் கட்டணம். 15 முதல் ஒரு மாதத்தில் ஒரு லெவல் பயிற்சியை முடித்து விடலாம். இன்ஜி., டிப்ளமோ பட்டதாரிகள் இதில் பங்கேற்கலாம் என்றார். தொடர்புக்கு: 76392 61424, 99768 21029, 04565 229 062.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us