UPDATED : டிச 28, 2014 12:00 AM
ADDED : டிச 28, 2014 11:50 AM
வில்லியனுார்: ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி நிறுவனர் விஜயலட்சுமி நினைவு கோப்பை விளையாட்டு பரிசளிப்பு விழா நடந்தது.
பொறையூர் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி நிறுவனர் விஜயலட்சுமி நினைவாக, பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது. புதுச்சேரியை சேர்ந்த 53 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கேற்றன. கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், சதுரங்கம், தடகளம் மற்றும் இறகு பந்து உள்ளிட்ட பல போட்டிகள் நடந்தன.
கைப்பந்து போட்டியில் ஜவகர் ஆங்கில பள்ளி முதலிடத்தையும், செவாலியே செல்லான் பள்ளி இரண்டாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், காலாப்பட்டு ஸ்டெடி பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விஜயலட்சுமி நினைவுக் கோப்பை வழங்கினார்.
