தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி

கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி

கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி


UPDATED : ஜன 23, 2015 12:00 AM

ADDED : ஜன 23, 2015 12:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2015 12:00 AM ADDED : ஜன 23, 2015 12:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டியில், எஸ்.என்.ஆர்.,கலை அறிவியல் கல்லூரி 176 ரன்கள் வித்தியாசத்தில் டாக்டர் என்.ஜி.பி.,தொழில்நுட்ப கல்லூரியை வென்றது.

மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் அக்ஷயா இன்ஜி.,தொழில்நுட்ப கல்லூரி கோப்பை அனைத்து கலை, இன்ஜி.,கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி, எஸ்.என்.ஆர்., கல்லூரி மற்றும் கோவை தொழில்நுட்ப கல்லூரியில் நடக்கிறது. ஏ, பி குழுக்களில் தலா 20 அணிகள், நாக்அவுட் முறையில் சந்திக்கின்றன.

* முதல் போட்டியில், எஸ்.என்.ஆர்.,கலை அறிவியல் கல்லூரி 176 ரன்கள் வித்தியாசத்தில் டாக்டர் என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லூரியை வென்றது. முதலில் பேட்செய்த எஸ்.என்.ஆர்., கல்லூரி, 30 ஓவர்களில், 6 விக்கெட்கள் இழப்புக்கு, 214 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்செய்த என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லூரி 14.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்கள் இழப்புக்கு 38 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை சந்தித்தது.

* 2வது போட்டியில், ஸ்ரீசக்தி இன்ஜி.,கல்லூரி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் எஸ்.என்.எஸ்.,தொழில்நுட்ப கல்லூரியை வென்றது. முதலில் பேட்செய்த எஸ்.என்.எஸ்., கல்லூரி, 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்செய்த சக்தி இன்ஜி.,கல்லூரி, 24.1 ஓவர்களில், 8 விக்கெட்கள் இழப்புக்கு, 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

* 3வது போட்டியில், எஸ்.வி.எஸ்.,இன்ஜி.,கல்லூரி, 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் ரத்தினம் இன்ஜி.,கல்லூரியை வென்றது. முதலில் பேட்செய்த ரத்தினம் இன்ஜி.,கல்லூரி, 25 ஓவர்களில், 9 விக்கெட்கள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்செய்த எஸ்.வி.எஸ்., இன்ஜி.,கல்லூரி 22.5 ஓவர்களில், 7 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

* 4வது போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, 86 ரன்கள் வித்தியாத்தில் ர்.வி.எஸ்.,இன்ஜி., தொழில்நுட்ப கல்லூரியை வென்றது. முதலில் பேட்செய்த குமரகுரு கல்லூரி, 27 ஓவர்களில், 2 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த ஆர்.வி.எஸ்., இன்ஜி., கல்லூரி, 27 ஓவர்களில், 9 விக்கெட்கள் இழப்புக்கு 99 ரன்கள் மட்டு எடுத்து தோல்வியை சந்தித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us