தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுக்கல்லூரியில் முதல்கட்ட கவுன்சிலிங்

அரசுக்கல்லூரியில் முதல்கட்ட கவுன்சிலிங்

அரசுக்கல்லூரியில் முதல்கட்ட கவுன்சிலிங்


UPDATED : ஜூன் 08, 2016 12:00 AM

ADDED : ஜூன் 08, 2016 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2016 12:00 AM ADDED : ஜூன் 08, 2016 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை
: அரசு கலைக்கல்லுாரியில் நடந்த முதல்கட்ட கலந்தாய்வில்
, வணிகவியல் பாடத்தில் சேருவதற்கே மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 2016-17ம் ஆண்டுக்கான இளநிலை மாணவர்கள் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு நேற்று முதல் முதல்கட்ட கலந்தாய்வு துவங்கியது.

இதில், தரவரிசை பட்டியிலில் முதல், 400 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்நாளான நேற்று நடந்த கலந்தாய்வில், 262 மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில், வணிகவியலில், 196, கம்ப்யூட்டர் சயின்ஸில், 10, வேதியியலில், 7, இயற்பியலில், 1, தாவரவியலில்,1, கணிதத்தில், 16, பொருளியலில், 5 மற்றும் தமிழில், 3 மாணவர்களும் சேர்ந்தனர்.

பெரும்பாலான மாணவர்கள் கலைப்பிரிவு பாடங்களுக்கே முன்னுரிமை கொடுத்தனர். இதில், வணிகவியல் பாடத்தில் சேர்வதற்கு மாணவர்களிடையை வரவேற்பு அதிகமாக இருந்தது. அறிவியல் பாடத்தில் மிகக்குறைவான அளவே மாணவர்கள் சேர்ந்தனர்.

முதல்கட்ட கலந்தாய்வு தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. காலி இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us