UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM
ADDED : ஜூலை 15, 2023 10:43 AM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழக சட்ட பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்ப பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு டாக்டர்அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், 15 அரசு சட்ட கல்லுாரிகளும், 9 தனியார் கல்லுாரிகளும் செயல்படுகின்றன. மேலும், பல்கலை வளாகத்தில் சீர்மிகு சட்டப்பள்ளியும் செயல்படுகிறது. இந்த கல்லுாரிகளில், 3 ஆண்டு எல்.எல்.பி., சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு வரும் 17ம் தேதி துவங்க உள்ளது. www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் ஆக.,10க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
