UPDATED : ஆக 22, 2023 12:00 AM
ADDED : ஆக 22, 2023 11:57 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு:
பல்கலைக் கழகங்களில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.எக்ஸ் வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
பல்கலைக் கழகங்களில் படிக்கும், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக 230 கோடி ரூபாய் வழங்கும்படி, சமூக நலத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தில் உள்ள, அனைத்து சமுதாயங்களின் மாணவர்களுக்கும், மடிக்கணினி வழங்கியிருக்க வேண்டும். வரும் நாட்களில் இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
