UPDATED : ஆக 22, 2023 12:00 AM
ADDED : ஆக 22, 2023 11:58 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
நிப்ட்-டீ கல்லுாரி மற்றும் குமார் நகர் பகுதியில், ஆயத்த ஆடை ஏற்றுமதி திறன் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில், நேற்று பகுதி நேர பயிற்சி வகுப்புகள் துவங்கின.மேனுவல் முறை மற்றும் கேட் மென்பொருள் உதவியுடன் பேட்டர்ன் மேக்கிங், அப்பேரல் மெர்ச்சன்டைசிங் மேனேஜ்மென்ட், தையலை உள்ளடக்கிய கார்மென்ட் மேக்கிங் உள்ளிட்ட பாடங்கள், செயல் விளக்கத்துடன் கற்பிக்கப்படுகிறது.பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிவோர், ஆடை உற்பத்தி சார்ந்த திறனை மேம்படுத்திக்கொள்ள இப்பயிற்சி வகுப்பில் இணையலாம். ஒருமாத பயிற்சிக்குப்பின், தேர்வு நடத்தப்பட்டு, சான்று வழங்கப்படுவதோடு, ஆடை உற்பத்தி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது. தொடர்புக்கு : 95979 14182, 78451 84962.
