தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு

மதுரையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு

மதுரையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு


UPDATED : நவ 05, 2023 12:00 AM

ADDED : நவ 05, 2023 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2023 12:00 AM ADDED : நவ 05, 2023 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு நடந்தது குறித்து மோசடி உட்பட 5 பிரிவுகளின்கீழ் குற்றவாளிகள் பெயர் குறிப்பிடாமல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது. ஏப்ரலில் விடைத்தாள் திருத்தப்பட்டது. விடைத்தாள் திருத்தப்பட்ட முகாமில் ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த இரு மாணவர்களின் விடைத்தாள்கள் ஒரே கையெழுத்தாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவர்கள் சென்டம் மதிப்பெண் பெற்றதால் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை துவங்கியது. சம்பந்தப்பட்ட மாணவர் 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடைவிதிப்பது குறித்து கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தடைகோரி மாணவர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுபடி போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையிலான குழு சம்பவத்தின் உண்மை தன்மையை விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தது.இவ்விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி.,க்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் செல்வகுமார் புகாரில், மோசடி, முறைகேடு, கூட்டு சதி உட்பட 5 பிரிவுகளின்கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் குற்றவாளிகள் பெயர் சேர்க்கப்படவில்லை.கல்வி அதிகாரிகள் கூறுகையில், மாணவர்கள் நலன்கருதி அவர்கள் பெயர் சேர்க்காவிட்டாலும், உடந்தையாக இருந்தவர்களின் பெயர்களை குற்றவாளிகளாக சேர்த்திருக்க வேண்டும். இவ்வழக்கை அப்படியே கிடப்பில் போட திட்டமிட்டுதான் இவ்வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தையும் ஏமாற்றுவதாக உள்ளது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us