தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளியில் ரூ.3.40 கோடி, தங்க காசுகள் பறிமுதல்

தனியார் பள்ளியில் ரூ.3.40 கோடி, தங்க காசுகள் பறிமுதல்

தனியார் பள்ளியில் ரூ.3.40 கோடி, தங்க காசுகள் பறிமுதல்


UPDATED : ஏப் 26, 2016 12:00 AM

ADDED : ஏப் 26, 2016 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 26, 2016 12:00 AM ADDED : ஏப் 26, 2016 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை
: ஊத்தங்கரையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில்
, வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய, 3.40 கோடி ரூபாய் மற்றும் 245 தங்கக் காசுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை - சேலம் சாலையில், தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 2,500 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

ரகசிய தகவல்:

இந்த பள்ளியில், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பணம் மற்றும் நகை பதுக்கி வைத்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு, நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அவர், கிருஷ்ணகிரி ஆட்சியர் கதிரவனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, நேற்று காலை, 8:45 மணிக்கு, ஊத்தங்கரை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயகுமாரி தலைமையிலான குழுவினர், பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

இதே நேரத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பள்ளி தாளாளர் தங்கியுள்ள தனியறை மற்றும் அவருக்கு சொந்தமான கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சோதனை நடத்தினர். சோதனையில், பள்ளி அலுவலகத்துக்குள், 3.40 கோடி ரூபாயும், தலா ஒரு கிராம் எடையுள்ள, 245 தங்கக் காசுகளும் இருந்தது கண்டிப்பிடிக்கப்பட்டது. இதுகுறித்து, ஆட்சியருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, பணம் மற்றும் நகை இருந்த அறையை பூட்டி, போலீஸ் பாதுகாப்பு போட்டனர்.

ஆசிரியர்களுக்கு பரிசு:
 

இதையடுத்து, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரிலிருந்து இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறையினர், பள்ளி தாளாளரிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, பள்ளி தாளாளர் தரப்பில் கூறியதாவது: 

பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக பணம் வைத்திருந்தோம். இதே போல், பொதுத்தேர்வு முடிவு வந்தவுடன், நன்றாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, தங்கக் காசு பரிசு வழங்குவோம்; இதற்காக தங்கக் காசை வாங்கி வைத்திருந்தோம். 

எங்களின் வளர்ச்சியை பிடிக்காத சிலர், இதுபோன்ற வதந்தியை பரப்பி வருகின்றனர். பணத்துக்கான உரிய ஆவணங்களை, வருமான வரித்துறை யினரிடம் சமர்பிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us