UPDATED : ஆக 22, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பிளஸ் 2 உடனடி தேர்வெழுதி, பொறியியல் படிப்பில் சேர தகுதி பெற்ற மாணவர்களுக்கான பொறியியல் துணை கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்கள் கடந்த 14ம் தேதி முதல் வழங்கப்பட்டன.
பிளஸ் 2 உடனடி தேர்வெழுதி, அதன் மூலம் பொறியியல் படிப்பில் சேசர தகுதி பெற்றவர்கள், பொறியியல் துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே பொறியியல் படிப்பில் சேர தகுதி பெற்றிருந்து, விண்ணப்பிக்கத் தவறியவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரேமண்ட் உதரியராஜ் கூறியதாவது:
பொறியியல் துணை கவுன்சிலிங்கிற்கு இதுவரை 867 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது, பொறியியல் மாணவர் சேர்க்கை 2008ம் ஆண்டுக்கான துணை கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்குமான கடைசி தேதி வருகிற 25ம் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள், அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள தேர்வு மைய அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.இவர்களுக்கான கவுன்சிலிங் 27ம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறும். பிளஸ் 2 உடனடி தேர்வெழுதி, பொறியியல் படிப்பில் சேர தகுதி பெற்றவர்களுடன், ஏற்கனவே தகுதி பெற்றிருந்த விண்ணப்பிக்கத் தவறியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு ரேமண்ட் உதரியராஜ் கூறினார்.கவுன்சிலிங்கில், கடந்த நான்கு நாட்களாக சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 பேர் பொறியியல் படிப்பில் சேர்கின்றனர். நேற்றைய கவுன்சிலிங்கில் ஆயிரத்து 364 பேர் உட்பட, இதுவரை 68 ஆயிரத்து 80 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய கவுன்சிலிங் முடிவில், 13 ஆயிரத்து 841 இடங்கள் காலியாக இருந்தன. இன்னும் ஐந்து நாட்கள் நடக்கவுள்ள கவுன்சிலிங்கில், எட்டாயிரம் இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிவில், காலியாக இருக்கும் இடங்களுக்கு பொறியியல் துணை கவுன்சிலிங் நடைபெறும். எனவே, இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் எதிர்பார்க்கப்பட்டதை விட, மிகக்குறைவான இடங்களே காலியாக இருக்கும் என தெரிகிறது.

