தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: 16,950 பேருக்கு வழங்க ஏற்பாடு

பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: 16,950 பேருக்கு வழங்க ஏற்பாடு

பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: 16,950 பேருக்கு வழங்க ஏற்பாடு


UPDATED : ஜூலை 13, 2024 12:00 AM

ADDED : ஜூலை 13, 2024 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2024 12:00 AM ADDED : ஜூலை 13, 2024 10:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் இந்தாண்டு பிளஸ் 1 படித்து வரும் 16,950 மாணவ, மாணவிகளுக்கு, தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்க தயார்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் இலவச பாட புத்தகம், சீருடைகள், காலணி, புத்தக பை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறந்தவுடன் இவைகள் அனைத்தும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்திலும், இந்த கல்வியாண்டில் 1.54 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகம், சீருடைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆண்டு தோறும் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டும், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 241 அரசு மேல்நிலை பள்ளிகள் மற்றும் 30 அரசு உதவிபெறும் பள்ளிகளில், இந்தாண்டு பிளஸ் 1 படித்து வரும் 16 ஆயிரத்து 950 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக, சென்னையிலிருந்து தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் மூலம் வாங்கப்பட்ட ஆவன் நிறுவன சைக்கிள் உதிரிபாகங்கள், விழுப்புரத்துக்கு வந்துள்ளது. விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் வளவனூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இந்த இலவச சைக்கிள்களின் உதிரி பாகங்கள் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மூலம் அந்த சைக்கிள்களுக்கான டயர், வீல், பாகங்களை இணைத்து, புதிய சைக்கிள் தயார்படுத்தும் பணிகள் கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது.

கடந்த காலங்களைப் போல், முதல்வர் படம் போன்றவை இல்லாமல், சைக்கிளின் முன் பகுதி கூடையில், கல்வித்துறையின் எம்பளத்துடன், விழிப்புணர்வு வாசகங்கள் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த சைக்கிள்கள் விரைவில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் கேட்டபோது, இந்தாண்டு பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு, தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விரைவில் அமைச்சர் தலைமையில் விழா நடத்தி, சைக்கிள்கள் வழங்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us