sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2 உடனடி தேர்வு முடிவு: 523 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி

/

பிளஸ் 2 உடனடி தேர்வு முடிவு: 523 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி

பிளஸ் 2 உடனடி தேர்வு முடிவு: 523 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி

பிளஸ் 2 உடனடி தேர்வு முடிவு: 523 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி


UPDATED : ஆக 07, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 07, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு பாடத்தில் தோல்வியுற்று தேர்வெழுதிய மாணவர்கள் மட்டும் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடையும் மாணவர்களுக்கு உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த மாணவர்கள், ஒரு கல்வியாண்டை வீணடிக்கக் கூடாது என்பதற்காகவும், தேர்ச்சி பெற்றால் அதே கல்வியாண்டில் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகவும் உடனடித் தேர்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த மே இறுதியில் வெளியிடப்பட்ட பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவில், மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் உடனடித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
இதில், ஒரு பாடத் தேர்வை எழுதிய மாணவர்கள் மட்டுமே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இரண்டு பாடங்கள், மூன்று பாடங்கள் தேர்வெழுதிய மாணவர்களில் அதிகமானோர் மீண்டும் தோல்வியைத் தழுவியிருப்பது தேர்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.
இரண்டு, மூன்று பாடங்களில் அதிகமான மாணவர்கள் மீண்டும் தோல்வியடைவதற்கு, தேர்வில் தோல்வி அடைந்ததால் மனதளவில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்குவதற்குள்ளாகவே உடனடித் தேர்வு வருவதும், அந்த தேர்வுக்கு தயாராக போதிய கால அவகாசமின்மையும் தான் முக்கியக் காரணங்களாக கருதப்படுகின்றன.
அதே நேரத்தில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்கள், முந்தைய தேர்வில் செய்த தவறுகளை உடனடியாக திருத்திக்கொண்டு, முன்பை விட கூடுதல் பலத்துடன் உடனடித் தேர்வை எதிர்கொள்ளும் திறனை பெறுகின்றனர் என்பதும் தெரியவருகிறது.
உடனடித் தேர்வு முடிவுகள் குறித்த புள்ளி விவரம்:
----------------------------------------------------------------
பாட எண்ணிக்கை     தேர்வெழுதியோர்   தேர்ச்சி பெற்றோர்
----------------------------------------------------------------
பள்ளி மாணவர்கள்:
1 பாடம்                           46,515                      27,594
2 பாடங்கள்                      15,660                        3,626    
3 பாடங்கள்                        5,541                          523
----------------------------------------------------------------
தனித்தேர்வு மாணவர்கள்:
1 பாடம்                          12,457                         5,470
2 பாடங்கள்                      4,176                            878
3 பாடங்கள்                      1,655                            187
---------------------------------------------------------------  






      Dinamalar
      Follow us