UPDATED : ஆக 19, 2023 12:00 AM
ADDED : ஆக 19, 2023 02:35 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி:
டில்லியின் பிரகதி மைதானத்தில் ரூ.2,700 கோடி செலவில் பல நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. பாரத் மண்டபம் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை மாதம் திறந்து வைத்தார்.இம்மைதானத்தில் ஜி-20 நாடுகளின் மாநாடு செப்.09 -10 ஆகிய இரு நாட்கள் நடக்கிறது. இங்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை டில்லி நேற்று துவக்கினர். பாதுகாப்பு தொடர்பான ஒவ்வொரு நிகழ்வுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது.
