UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM
ADDED : ஜூலை 19, 2023 09:00 AM
அ நிறம் | அளவு
சென்னை:
அடுத்த வாரம் நடக்க உள்ள ஜி 20 மாநாட்டு கூட்டங்களில் தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.சென்னையில் அடுத்த வாரம், 24, 26, 27, 28 ஆகிய நாட்களில், ஜி 20 மாநாட்டு கூட்டங்கள் நடக்க உள்ளன. இதில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், நிதிநிலை வளர்ச்சி குழுமங்கள் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இவற்றில் பங்கேற்போர் தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டை அறியும் வகையில், தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில், இரவு உணவு இடைவேளையின் போது, பரதநாட்டியம், கிராமியக் கலைகள், நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தப்பட உள்ளன.
