தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆக., 29,30ல் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் குறித்த மறுமலர்ச்சி ஆய்வுக் கூட்டம்

ஆக., 29,30ல் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் குறித்த மறுமலர்ச்சி ஆய்வுக் கூட்டம்

ஆக., 29,30ல் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் குறித்த மறுமலர்ச்சி ஆய்வுக் கூட்டம்


UPDATED : ஆக 07, 2014 12:00 AM

ADDED : ஆக 07, 2014 12:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2014 12:00 AM ADDED : ஆக 07, 2014 12:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: திருச்சியில், சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் குறித்த மறுமலர்ச்சி ஆய்வுக் கூட்டம், ஆக., 29,30ல் நடக்கிறது. இதில், தமிழக பள்ளிகளின் உடற்கல்வி இயக்குனர்கள் பங்கேற்கின்றனர்.

மத்திய அரசின் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், என்.எஸ்.எஸ்., யங் இந்தியா அமைப்பு சார்பில், திருச்சி தேசிய கல்லூரியில் நடக்கும் இக்கூட்டத்தில், இந்தியா, கனடா, ருமோனியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் விளையாட்டுத்துறை நிபுணர்கள், பேராசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தின் சார்பில், மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு பள்ளியின் உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர் என, 32 பேர் பங்கேற்கின்றனர்.

சர்வதேச நிலையில் புகழ்பெற்ற விளையாட்டுக்கள், அதில் உள்ள பிரச்னைகள் மற்றும் சவால்கள், பள்ளி வாரியாக விளையாட்டுகளை மேம்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள், விளையாட்டிப்போட்டிகளின் போது வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள், விரைவில் குணப்படுத்துவது, பள்ளி அளவில் விளையாட்டில் சிறந்துவிளங்கும் மாணவ, மாணவியரை தேர்ந்தெடுத்து, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செய்து பரிசுபெற வைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us