தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சந்திரயான்-3 வெற்றி; மாணவர்களிடம் ஊற்றெடுக்கும் அறிவியல் ஆர்வம்

சந்திரயான்-3 வெற்றி; மாணவர்களிடம் ஊற்றெடுக்கும் அறிவியல் ஆர்வம்

சந்திரயான்-3 வெற்றி; மாணவர்களிடம் ஊற்றெடுக்கும் அறிவியல் ஆர்வம்


UPDATED : ஆக 28, 2023 12:00 AM

ADDED : ஆக 28, 2023 09:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2023 12:00 AM ADDED : ஆக 28, 2023 09:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நிலவின் தென் துருவத்தில், விண்கலத்தை நிறுவிய முதல் நாடு என்ற பெருமை, நம் நாட்டுக்கே சொந்தம் என்பது இச்சாதனையின், மகத்தான சிறப்பு. விஞ்ஞானிகள், தொழில்நுட்ப பொறியாளர்கள் என, ஏறத்தாழ, 1,000 பேரின் உழைப்பில் உருவானது தான் இந்த சாதனை என்கிறது, இஸ்ரோ. இந்த சாதனை நிகழ்வு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பெரும் ஊக்குவிப்பாய் மாறியிருக்கிறது.இஸ்ரோ அரங்கில் அமர்ந்து, விண்வெளியில் தங்களால் உருவாக்கப்பட்ட விண்கலம் நிகழ்த்தும் விந்தையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர் விஞ்ஞானிகள். சில நிமிடங்களில், அங்கு அமர்ந்திருந்த விஞ்ஞானிகள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், எந்த பள்ளியில் படித்தவர்கள் என்பது போன்ற தகவலை, வாட்ஸ் ஆப், முகநுால், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட துவங்கிவிட்டனர், அவர்களை நன்கறிந்தவர்கள்.அடடே...இவர் நம்ம ஊரைச் சேர்ந்தவரா, நான் படிச்ச பள்ளியில படிச்சவரா? என வியப்பு கலந்த பெருமையுடன், தங்கள் மனைவி, பிள்ளைகளிடம் அந்த தகவலை பரிமாறிக் கொண்டனர் பலர். நான் படித்த ஸ்கூல்ல படிச்சவர் தான்; இன்னைக்கு பார், எவ்வளவு பெரிய விஞ்ஞானியா இருக்காரு; அந்த மாதிரி நீங்களும் வர முயற்சி பண்ணணும் என தங்கள் பிள்ளைகளை ஊக்குவித்தனர் பெற்றோர். சந்திரயான் 3 என்ற அசாத்திய சாதனை, நம் விஞ்ஞானிகளின் அறிவாற்றலை, இன்றைய மாணவ சமுதாயத்தினருக்கு பாடமாக்கியிருக்கிறது என்று சொல்வதில் மிகையில்லை. அதுமட்டுமல்ல, இதன் திட்ட இயக்குனர் வீர முத்துவேல், தனது பள்ளிப்பருவம், கல்லுாரி படிப்பு, பயின்ற விதம், விஞ்ஞானியாக முன்னேறியது குறித்து பேசிய விவரம், வைரலான நிலையில், அவரது எளிமையும், முயற்சியும் மாணவர்களை பிரமிக்க வைத்திருக்கிறது; சிந்திக்க வைத்திருக்கிறது. சாதாரண, சாமானிய வீட்டு பிள்ளைகளும் சாதிக்க முடியும் என்ற, நம்பிக்கையை விதைத்திருக்கிறது.நிலவை கொண்டாடுவோம்!
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ கூறுகையில், சந்திரயான் 3, விண்ணில் ஏவப்பட்ட போதே, அதுதொடர்பாக, மாணவ, மாணவியர் மத்தியில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, அவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வம் ஏற்படுத்தப்பட்டது. மாணவ, மாணவியரும் நிலவை கொண்டாடினர். பள்ளிகள் தோறும், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அறிவியலை அதிகம் கற்றுத்தர வேண்டும். கணிதமும், அறிவியலும் தான, விஞ்ஞானத்தை அடுத்தடுத்த நகர்வுக்கு அழைத்து செல்கிறது. விஞ்ஞானிகளுக்கு, நிலவில் கால் வைப்பது தான் கனவு; அந்த சாதனையை, நம் விஞ்ஞானிகள் நிச்சயம் எட்டிப்பிடிப்பர் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us