UPDATED : அக் 08, 2023 12:00 AM
ADDED : அக் 08, 2023 08:47 AM
மைசூரு:
மைசூரு தசராவை ஒட்டி, நிலவில் தடம் பதித்த சந்திரயான் 3 திட்டத்தை, மணல் சிற்பம் மூலம் உயிர் கொடுக்கும் பணியில் மணல் சிற்ப கலைஞர் கவுரி ஈடுபட்டுள்ளார்.மைசூரை சேர்ந்தவர் மணல் சிற்ப கலைஞர் கவுரி. மைசூரு தசரா மைதானத்தில், மணல் சிற்பங்கள் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.அவர் கூறியதாவது:
கர்நாடகா கண்காட்சி வாரியம் என்னை அணுகி, மணல் சிற்பம் வடிவமைக்குமாறு கேட்டு கொண்டனர். அதன்படி, இந்தாண்டு நிலவில் தடம் பதித்து, உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் வடிவமைத்து வருகிறோம்.இத்துடன், கர்நாடக அரசின் வாக்குறுதி திட்டங்களான கிரஹலட்சுமி, கிரஹ ஜோதி, சக்தி, அன்ன பாக்யா, யுவ நிதி திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு சிற்பமும் வடிவமைத்து வருகிறோம். கடந்த பத்து நாட்களாக என்னுடன் பத்து கலைஞர்கள் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மணல் வடிவமைத்து, வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த சிற்பங்களை உருவாக்க 10 டிரக் மணல் தேவைப்பட்டது. தசரா திருவிழாவுக்கு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்குள் பணியை முடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
