தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

தமிழகத்தில் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

தமிழகத்தில் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு


UPDATED : ஆக 01, 2023 12:00 AM

ADDED : ஆக 01, 2023 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2023 12:00 AM ADDED : ஆக 01, 2023 10:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் 450 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்து உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த 58 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்து உள்ளது. இதனால், இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தை பிடித்து உள்ளது. அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி திருமண் (நாமகட்டி) தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், ஜூன் 15ம் தேதி தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை உதவியுடன் திருநெல்வேலி மாவட்டம் வீரவாநல்லூர் சவுராஷ்டிரா நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் சார்பில் செடிபுட்டா சேலைக்கும், ஏப்ரல் 29ம் தேதி நபார்டு மதுரை அக்ரி பிசின்ஸ் இன்குபேஷன் அமைப்பு சார்பில், கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு, தமிழக அரசின் நோடல் அலுவலர் சஞ்சய் காந்தி, விண்ணப்பித்து இருந்தார்.இந்த மூன்று பொருட்களுக்கான விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்,மத்திய அரசு நாளிதழில், இந்தாண்டு மார்ச்.30ம் தேதி அரசியலில் வெளியிட்டது. தற்போது நான்கு மாதங்கள் கடந்த நிலையில், விண்ணப்பங்களுக்கு மறுப்புகள் எதுவும் வராத நிலையில், இன்று (ஜூலை 31) ஐடேரி நாமகட்டி, செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்து உள்ளது.சஞ்சய் காந்தி பேட்டி:
இது குறித்து அறிவு சார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்க தலைவர் சஞ்சய் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: இம் மூன்று பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் நெசவாளர்கள். விவசாயிகள் இவர்களின் வாழ்வாதாரம் உயரும். இப்பொருட்களின் விற்பனை விலை உயரும். விரைவில் தஞ்சாவூரை சேர்ந்த திருவையாறு வாழை இலை, தஞ்சாவூர் பாம்பே அல்வா உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இருக்கிறேன். இந்தியாவிலேயே அதிகம் புவிசார் குறியீடு பெற்ற பட்டியலில் டெல்டா மாவட்டம் திகழும். இவ்வாறு அவர் கூறினார்.வாழைப்பழம், நாமக்கட்டி, சேலை குறித்து முழு விபரம் பின்வருமாறு:கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்:
மருத்துவ குணம் கொண்ட மட்டி ரக வாழைப்பழங்கள் நோய் எதிர்ப்புசக்தி கொண்டவை என்பதால், பச்சிளம் குழந்தைகள் முதல், நோயாளிகள் வரை அனைவரும் சாப்பிடுவது வழக்கம். இந்த வாழைப்பழத்தின் தோல் பொதுவாக மஞ்சள் நிறத்தில்தான் காணப்படும். மட்டி வாழை மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூடியது. வாழைத்தார்களில் வாழைக்காய்கள் நெருக்கமாக இருக்கும். இனிப்புச் சுவையும் மணமும் கொண்டதாக மட்டி வாழைப்பழம் இருப்பதால் குமரி மாவட்டத்தில் மட்டிப் பழத்தை குழந்தைகளுக்கு விரும்பி கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு முதல் முதலில் மட்டி வாழைபழத்தை நசுக்கி கொடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.ஜடேரி நாமக்கட்டி:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள ஜடேரி கிராமத்தில் வாழும் 150 குடும்பங்களில் 100 குடும்பத்தினர் நாமக்கட்டி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கட்டி தயாரிப்புக்கு ஆதாரமான இருப்பவை வெள்ளை பாறைகள் ஜடேரி அருகே உள்ள தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் உள்ளன. வெள்ளைப் பாறைகளை வெட்டி எடுத்து, சிறு சிறு கட்டிகளாக உடைத்து பின் நாமக்கட்டிகளை தயாரிக்கின்றனர்.செடி புட்டா சேலை:
திருநெல்வேலி மாவட்டம் வீரவாநல்லூர் பகுதியில் சவுராஷ்ட்ரா இன மக்களால் உருவாக்கப்பட்டது செடி புட்டா சேலை. இந்த சேலை வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் இதமான வெப்பமும் இருப்பதாக சேலையை உடுத்தும் பெண்கள் உணர்கின்றனர். பெரும்பாலும் இச்சேலையில் செடியும் பூக்களும் நிறைந்த டிசைன்கள் மட்டுமே இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us