UPDATED : ஜூன் 27, 2025 12:00 AM
ADDED : ஜூன் 27, 2025 07:03 PM
பெங்களூரு:
அரசு விதிகளின்படி தனியார் பல்கலைக் கழகங்களில் உள்ள சீட்களில், 60 சதவீதம் சீட்களை அரசு கோட்டாவுக்கு அளிக்க வேண்டும். ஆனால், பெங்களூரின் செயின்ட் ஜோசப் பல்கலைக் கழகம், இந்த விதியை பின்பற்றவில்லை. அத்துடன் மாணவர் சேர்க்கைக்கும் அரசின் அனுமதி பெறவில்லை.
இதுகுறித்து ஆய்வு செய்ய, கர்நாடக உயர் கல்வி கவுன்சில், வல்லுநர் கமிட்டி அமைத்தது. வல்லுநர் கமிட்டியும், செயின்ட் ஜோசப் பல்கலைக் கழகத்துக்கு சென்று, ஆய்வு செய்தது.
இந்த பல்கலைக்கழகம், 2023 - 24 மற்றும் 2024 - 25ம் கல்வியாண்டில், பல்கலைக்கழக விதிகளை மீறி, 500க்கும் மேற்பட்ட சீட்களை நிரப்பியது. அரசின் அனுமதி இல்லாமல் 20க்கும் மேற்பட்ட புதிய படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து அரசிடம் வல்லுநர் கமிட்டி அறிக்கை அளித்தது. விதிகளை மீறிய செயின்ட் ஜோசப் பல்கலைக் கழகத்துக்கு, உயர் கல்வித்துறை 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.