UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM
ADDED : ஜூலை 28, 2023 05:53 PM
அ நிறம் | அளவு
சென்னை:
8ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஜூலை 31ம் தேதி தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆகஸ்ட் 7 முதல் 11ம் தேதி வரை நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுத, தேர்வுத் துறையின் சேவை மையங்களில் விண்ணப்பித்தவர்கள், ஜூலை 31ம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வுக் கூட அனுமதி சீட்டின்றி தேர்வர்கள் தேர்வு எழுத அனுபதிக்கப்பட மாட்டார்கள்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
