தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு தேர்வு முடிவால் விரக்தி ’104’ல் 1,041 பேருக்கு ஆலோசனை

10ம் வகுப்பு தேர்வு முடிவால் விரக்தி ’104’ல் 1,041 பேருக்கு ஆலோசனை

10ம் வகுப்பு தேர்வு முடிவால் விரக்தி ’104’ல் 1,041 பேருக்கு ஆலோசனை


UPDATED : மே 26, 2016 12:00 AM

ADDED : மே 26, 2016 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2016 12:00 AM ADDED : மே 26, 2016 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின. மதிப்பெண் குறைவு மற்றும் தோல்வியால் மாணவர்கள் தற்கொலை எண்ணம் வரை செல்லாமல் இருக்கும் வகையில், தமிழக அரசின், 104 ஆலோசனை மையத்தில், சிறப்பு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், நேற்று மட்டும், 1,041 பேருக்கு, ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சேவை மைய உளவியல் ஆலோசகர்கள் கூறியதாவது: 

ஒரு பாடத்தில் தோல்வி என, பக்கத்து வீட்டு மாணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதுபோல் தோல்வி அடைந்த என் மகனுக்கும் தற்கொலை எண்ணம் வருமோ என, பயமாக உள்ளது என்பது உட்பட பலவித சந்தேகங்களுடன் ஏராளமான பெற்றோர் அழைத்தனர். பெற்றோருக்கும், மாணவ, மாணவியருக்கும் உரிய ஆலோசனை வழங்கினோம். 

நேற்று மாலை, 7:00 மணி வரை தேர்வு முடிவுகள் தொடர்பாக, 1,041 அழைப்புகளுக்கு ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. எங்கள் ஆலோசனையால், ஒரு உயிர் காப்பாற்றப்பட்டாலும் மகிழ்ச்சி தான். இன்றும் ஆலோசனை தொடரும். இவ்வாறு ஆலோசகர்கள் கூறினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us