UPDATED : ஆக 06, 2023 12:00 AM
ADDED : ஆக 06, 2023 09:35 AM
திருப்பூர்:
வேளாண் விளை பொருட்களை எங்கிருந்தும், எந்தவொரு வியாபாரியும் வாங்கும் நோக்கில் இ - நாம் எனப்படும் தேசிய வேளாண் சந்தை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.வேளாண் துறையின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் வாயிலாக, ஏராளமான விளை பொருட்கள், ஏலத்தின் வாயிலாக விற்கப்படுகின்றன. இ - நாம் வர்த்தக முறையில் ஏல விற்பனையை மேற்கொள்ள, மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பல இடங்களில் இத்திட்டம் முழுமை பெறவில்லை.ஒழுங்கு முறை விற்பனை கூடம் அலுவலர்கள் கூறியதாவது:
இ - நாம் முறையில் விவசாயிகளுக்கான பண பரிமாற்றம் அனைத்தும் வங்கி வாயிலாகவே மேற்கொள்ளப்படும். அவ்வப்போது தங்கள் விளை பொருளுக்கு தொகை பெற்று பழகிய விவசாயிகள், வங்கி பரிவர்த்தனைக்குள் வர தயங்குகின்றனர். வியாபாரிகளும், முழு அளவில் இத்திட்டத்தின் கீழ் இணைய ஆர்வம் காட்டாமல் உள்ளனர். நடப்பாண்டில், இத்திட்டத்தை நுாறு சதவீதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
