UPDATED : ஏப் 15, 2024 12:00 AM
ADDED : ஏப் 15, 2024 09:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:
லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ராணிப்பேட்டை மாவட்டம், போஸ்கோ வேளாண்மை கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவர்கள், உத்திரமேரூர் முன்மாதிரி நடுநிலைப் பள்ளி, மாணவ - மாணவியரோடு இணைந்து 100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடத்தினர்.