பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் தீயில் எரிந்து நாசம்
பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் தீயில் எரிந்து நாசம்
UPDATED : ஏப் 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
வேலூர்: வேலூர் ஊரிசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் வைத்திருந்த அறையில் தீ பிடித்ததால், அங்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான விடைத்தாள்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன. தீயில் எரிந்து போனவை, பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாவது தாள் பாட விடைத்தாள்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ஊரிசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் 22 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு விடைத்தாள்கள் இருந்த அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைக்கும் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும், இரண்டாயிரம் விடைத்தாள்கள் முற்றிலும் எரிந்து
நாசமாயின. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆசிரியர்களுக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான மோதல் காரணமாக இருக்கும் என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.