தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : வழக்கம் போல் மாணவிகள் அதிகம் தேர்ச்சி

10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : வழக்கம் போல் மாணவிகள் அதிகம் தேர்ச்சி

10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : வழக்கம் போல் மாணவிகள் அதிகம் தேர்ச்சி


UPDATED : மே 10, 2024 12:00 AM

ADDED : மே 10, 2024 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2024 12:00 AM ADDED : மே 10, 2024 10:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று (மே 10), காலை 9:30 மணிக்கு வெளியானது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26ம் தேதி துவங்கி, ஏப்., 8ம் தேதி வரை நடைபெற்றது. இன்று காலை சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விபரங்களை, ஆன்லைன் வழியில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு துறை இயக்குநர் கூறியதாவது:


* 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதினர்
* 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி

* மொத்தம் 4, 105 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

* மொத்த மாணவர்கள் தேர்ச்சி 91.55 % பேர்

* மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி

* கடந்த ஆண்டை விட தேர்ச்சி அதிகம்

* அரியலூர் மாவட்டம் முதலிடம் 97.31 % தேர்ச்சி

* சிவகங்கை மாவட்டத்திற்கு இரண்டாவது இடம்*

* ராமநாதபுரம் மாவட்டம் 3 வது இடம்

* 1364 அரசு பள்ளிகள் 100 % தேர்ச்சி

*வேலூர் மாவட்டத்தில் குறைந்த அளவில் தேர்ச்சி 82.07

* மாணவர்கள் 94.53 சதவீத தேர்ச்சி

* மாணவிகள் 88.58 சதவீத தேர்ச்சி
* 0.16 சதவீதம் கடந்த ஆண்டைவிட தேர்ச்சி அதிகம்

* தமிழ் பாடத்தில் 8 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு

* மாணவர்கள் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேர் தேர்ச்சி

* மாணவிகள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 பேர் தேர்ச்சி - 94. 53 %

* கணிதத்தில் 20, 691 பேர் நூற்றுக்கு நூறு பெற்றனர்

தேர்வு முடிவை, www.tnresults.nic.in/, www.dge.tn.gov.in/ மற்றும் https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களில், தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக, தேர்வு முடிவுகள் அனுப் பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us