தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/1,100 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலி: 5 ஆண்டுகளாக நீடிக்குது பதவி உயர்வு சிக்கல்

1,100 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலி: 5 ஆண்டுகளாக நீடிக்குது பதவி உயர்வு சிக்கல்

1,100 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலி: 5 ஆண்டுகளாக நீடிக்குது பதவி உயர்வு சிக்கல்


UPDATED : ஜன 10, 2026 11:29 AM

ADDED : ஜன 10, 2026 11:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2026 11:29 AM ADDED : ஜன 10, 2026 11:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், ஐந்து ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்குவதில் சிக்கல் நீடிப்பதால் 1,100க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன.

வழக்குகளை விரைவுபடுத்தி தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என்று ஆசிரியர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 2012க்கு பின் அரசு, உதவிபெறும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' கட்டாயமாக்கப்பட்டது.

இதன்பின் பதவி உயர்வுக்கு, 'டெட்' தேர்ச்சி பெற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க கோருவது, முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

சில வழக்குகளில் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் முடிவு தெரியாததால் அரசு, உதவிபெறும் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது.

இதனால் தற்போது வரை நடுநிலைப் பள்ளிகளில் 300, உயர்நிலைப் பள்ளிகளில் 800க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இது குறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

நீதிமன்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டுவரவோ, விரைவுபடுத்தவோ கல்வி அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை.

முந்தைய ஆண்டுகளில் அரசு கொள்கை முடிவுகள் எடுத்து இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், தற்போது அதுபோன்ற நடவடிக்கை எடுப்பதில்லை. அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளிகளில், 'டெட்' தேர்ச்சி பெறாத 350க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு பல ஆண்டுகளாக அனுமதி கிடைக்கவில்லை.

ஆனால், சமீபத்தில் அப்பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டன. அந்த உத்தரவில், பதவி உயர்வு வழங்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தால், நுாற்றுக்கணக்கான அரசு உதவிபெறும் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பியிருக்கலாம்.

நீதிமன்ற வழக்குகளை விரைவுபடுத்தி, கொள்கை முடிவுகள் அடிப்படையில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us