UPDATED : நவ 28, 2023 12:00 AM
ADDED : நவ 28, 2023 10:09 AM
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் 1532 அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 48, நகராட்சி பள்ளிகள் 2, ஆதிதிராவிடர் பள்ளிகள் 2, உதவி பெறும் பள்ளிகள் 24 என 76 பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்கள் 10, பிளஸ் 2 மாணவர்கள் 528 பேர் என 538 பேர் ஜே.இ.இ., தேர்வுக்கும், பிளஸ் 1 மாணவர்கள் 17, பிளஸ் 2 மாணவர்கள் 979 என 996 பேர் நீட் தேர்வுக்கும் பயிற்சி பெற்று வருகின்றனர்.11 ஒன்றியங்களில் 11 மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான சிறப்பு வகுப்புகள், பயிற்சி புத்தகங்கள் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல் படி செய்யப்பட்டு வருகிறது. மாதிரி தேர்வுகளும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. ஜனவரிக்கு பின் இன்னும் பயிற்சிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன என பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
