UPDATED : நவ 28, 2023 12:00 AM
ADDED : நவ 28, 2023 10:11 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சிவகங்கை வட்டார வள மையத்திற்குட்பட்ட பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது.இப்பயிற்சியில் 127 ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். பயிற்சியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுடன் இணை இயக்குநர் சுவாமிநாதன் கலந்தாலோசித்தார். காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பொறுப்பு ஆனந்தி பார்வையிட்டார். சிவகங்கை வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு ரூபாராணி மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
