தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நவ.,16 முதல் 20ம் தேதி வரை இரண்டாம் பருவத்தேர்வு

நவ.,16 முதல் 20ம் தேதி வரை இரண்டாம் பருவத்தேர்வு

நவ.,16 முதல் 20ம் தேதி வரை இரண்டாம் பருவத்தேர்வு


UPDATED : நவ 14, 2023 12:00 AM

ADDED : நவ 14, 2023 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2023 12:00 AM ADDED : நவ 14, 2023 09:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை மாவட்ட பள்ளிகளுக்கு, இரண்டாம் பருவத்தேர்வு வரும், 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடப்பதாக, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை, வரும் 16ம் தேதி துவங்கும் தேர்வுகள், 18ம் தேதியுடன் முடிவடைகிறது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் வரும், 20ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுக்கான பாடப்பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. காலை, மதியம் என இரு பிரிவுகளாக தேர்வுகள் நடக்கின்றன. விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடுத்தமாத இறுதியில், முழு பாடத்திட்டத்தில் இருந்தும், அரையாண்டு தேர்வுக்கு வினாக்கள் இடம்பெறும். பின் திருப்புதல் தேர்வுகள் நடத்தி, பொதுத்தேர்வுக்கு தயார்ப்படுத்தப்படும். எனவே, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், இரண்டாம் பருவத்தேர்வில், பாடவாரியாக தோல்வியை தழுவுவோருக்கு, சிறப்பு வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us