தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நவ.16ல் 2வது புத்தக கண்காட்சி

நவ.16ல் 2வது புத்தக கண்காட்சி

நவ.16ல் 2வது புத்தக கண்காட்சி


UPDATED : நவ 08, 2023 12:00 AM

ADDED : நவ 08, 2023 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2023 12:00 AM ADDED : நவ 08, 2023 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், நுாலகத்துறை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து மதுரை ரோட்டில் உள்ள கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நவ. 16 முதல் 27 வரை 2வது புத்தக கண்காட்சி நடக்க உள்ளது.இதில் தமிழகத்தின் பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள் உடன் இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் சிலவும் கலந்து கொள்கின்றன. இக்கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்குத் தனித்தனியாக நுாற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.இந்த அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன. இக்கண்காட்சி காலை 11:00 மணிக்கு துவங்கி இரவு 9:00 மணி வரை நடக்கும். இக்கண்காட்சியில் தினசரி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்படும்.கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள், பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இதில் பங்கேற்று கண்காட்சியில் இடம்பெறும் பதிப்பகங்களின் புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us