17ல் சிறுவர், சிறுமியருக்கான கோடைக்கால பயிற்சி முகாம்
17ல் சிறுவர், சிறுமியருக்கான கோடைக்கால பயிற்சி முகாம்
UPDATED : ஏப் 12, 2026 11:19 AM
ADDED : ஏப் 12, 2026 11:20 AM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு பிரிவில் நடப்பாண்டிற்கான மாவட்ட அளவிலான சிறுவர், சிறுமிகளுக்கு, 15 நாட்கள் இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம் வரும், 17ல் துவங்கி அடுத்த மாதம், மே, 1ம் தேதி வரை, காலை மற்றும் மாலை வேளைகளில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.
இப்பயிற்சி முகாமில் தடகளம், கைப்பந்து, தேக்வாண்டோ, குத்துச்சண்டை, ஜூடோ, கூடைப்பந்து, சிலம்பம் மற்றும் கால்பந்து விளையாட்டு போட்டிகளுக்கு சிறந்த பயிற்றுனர்களை கொண்டு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, அலுவலக தொலைபேசி, 04341 291727 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

