10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள்திருத்த 3,000 பேர் நியமனம்
10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள்திருத்த 3,000 பேர் நியமனம்
UPDATED : ஏப் 11, 2025 12:00 AM
ADDED : ஏப் 11, 2025 08:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம், 28ல் தொடங்கியது. சேலம் மாவட்டத்தில், 41,398 மாணவர்கள், தேர்வு எழுதும் நிலையில், 183 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தனித்தேர்வராக, 1,465 பேர் உள்ளனர். ஏற்கனவே தமிழ், ஆங்கிலம், ஆப்ஷனல் மொழி தேர்வு, கணித தேர்வு முடிந்தது. நாளை அறிவியல், 15ல் சமூக அறிவியல் தேர்வு நடக்க உள்ளது.
இதுகுறித்து கல்வி அலுவலர்கள் கூறுகையில், வரும், 21ல், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இதற்கு லைன்மேடு, தாரமங்கலம், ஆத்துார் பகுதிகளில், முகாம் நடக்கும்.
இப்பணி, 22ல் தொடங்கி, 30ல் முடியும். இப்பணியில், 3,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர் என்றனர்.

