UPDATED : ஏப் 11, 2025 12:00 AM
ADDED : ஏப் 11, 2025 06:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
என்.எம்.எம்.எஸ் எனப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் படிப்புதவித்தொகைத் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாக உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான 2024-25ம் ஆண்டிற்கான என்.எம்.எம்.எஸ் தேர்வு கடந்த பிப்.,22ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். மாணவர்கள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்களுடைய மதிப்பெண்களை நாளை பிற்பகல் அறிந்து கொள்ளலாம். இந்த ஊக்கத்தொகைப் பெற தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலும் இந்த இணையதளத்திலேயே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

