தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'இளந்தளிர்' விதைக்கும் பசுமை

'இளந்தளிர்' விதைக்கும் பசுமை

'இளந்தளிர்' விதைக்கும் பசுமை


UPDATED : செப் 27, 2026 03:05 PM

ADDED : செப் 27, 2026 03:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 03:05 PM ADDED : செப் 27, 2026 03:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசுப்பள்ளி மாணவர்களிடமும் பல்வேறு தனித்திறன்கள் இருப்பதை அவர்களின் சாதனைகள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் 'கலைத் திருவிழா' போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தாண்டு கலைத் திருவிழாவுக்கான தயாரிப்பின்போது மாணவர்களிடம் 'இளையோர் திறன்' என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. பலரும் இதனை ஒரு போட்டிக்கான தலைப்பாக மட்டும் பார்த்த நிலையில், காங்கயம் கல்லாங்காட்டுப்புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி தன்யா, அதை தனது செயலிலும் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தார்.

இது குறித்து வகுப்பாசிரியை மகேஸ்வரியிடம் ஆலோசனை கேட்டபோது, “வீடு, பள்ளி, ஊர் ஆகியவற்றின் நலனில் அக்கறையுடன் செயல்படுவதும், நன்றாகப் படித்து சாதிப்பதும் திறமையை வெளிப்படுத்தும் செயல்கள்தான்” என ஊக்கமளித்துள்ளார்.

இதனால், மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் கொண்ட தனது பெற்றோரின் உதவியுடன், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் முயற்சியை தன்யா தொடங்கினார். மாணவியின் இந்த முயற்சியை பள்ளி தலைமையாசிரியை சாவித்ரி, வட்டாரக்கல்வி அலுவலர் சுப்ரமணியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மேலும், தொடர்ந்து இதுபோன்ற சமூக நல செயல்களில் ஈடுபடுமாறு மாணவியை ஊக்கப்படுத்தினர்.

'ஒரு சிறிய முயற்சியும் பெரிய மாற்றத்துக்கு துவக்கமாகும்,' என்பதை நிரூபிக்கும் வகையில், மாணவி தன்யாவின் இந்த பசுமை முயற்சி அமைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us