தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/5 ஐ.ஐ.டி.,க்களுக்கு தேசிய அங்கீகாரம்

5 ஐ.ஐ.டி.,க்களுக்கு தேசிய அங்கீகாரம்

5 ஐ.ஐ.டி.,க்களுக்கு தேசிய அங்கீகாரம்


UPDATED : செப் 23, 2020 12:00 AM

ADDED : செப் 23, 2020 09:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2020 12:00 AM ADDED : செப் 23, 2020 09:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முன்னதாக, மத்திய கல்வித் துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், மசோதாவை தாக்கல் செய்து பேசியதாவது:
இந்தியாவில், ஐ.ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப மையங்கள், 25 உள்ளன. அதிகாரம் இல்லைஇவற்றில், 5 மையங்களை, மத்திய அரசு நடத்துகிறது. அரசு மற்றும் தனியார் கூட்டுடன், 15 மையங்கள் நடத்தப்படுகின்றன.
இவற்றுடன், குஜராத்தின் சூரத், மத்திய பிரதேசத்தின் போபால், பீஹாரின், பாகல்பூர், கர்நாடகாவின் ரெய்ச்சூர், திரிபுராவின் அகர்தலா நகரங்களில், புதிய, ஐ.ஐ.டி.,க்கள் துவக்கப்பட்டு உள்ளன. கடந்த, 1860ம் ஆண்டின் சொசைட்டி ரிஜிஸ்டிரேஷன் சட்டத்தின் கீழ் செயல்படும் இந்த மையங்களுக்கு, பட்டம் அல்லது பட்டயங்கள் வழங்குவதற்கு அதிகாரம் இல்லை.
எனவே, இந்த மையங்களுக்கு தேசிய அங்கீகாரம் வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்ப சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய ஐந்து, ஐ.ஐ.டி.,க்கள், மாணவர்களுக்கு தேசிய அங்கீகாரத்துடன் பட்டயங்கள், பி.டெக்., எம்.டெக்., பட்டங்கள் மற்றும் முனைவர் பட்டங்களை வழங்க முடியும். இதனால், இந்த மையங்கள், அதிக அளவில் மாணவர்களை ஈர்த்து, தகவல் தொழில்நுட்ப துறையில் வலுவான ஆராய்ச்சிக்கான அடித்தளத்தை ஏற்படுத்த முடியும். இம்மையங்கள் அரசு மற்றும் தனியார் கூட்டுடன் செயல்படும். புதிய கல்விக் கொள்கை, புதிய இந்தியாவை கட்டமைக்க உதவும்.
ஆதரவு

ஐ.ஐ.டி.,க்களுக்கு மத்திய அரசு, 50 சதவீத மானியம் வழங்குகிறது. மாநில அரசுகள், 35 சதவீதமும், தொழில்துறை, 15 சதவீத பங்களிப்பையும் வழங்குகின்றன.வட கிழக்கு மாநிலத்தில் மட்டும், தொழில்துறையினரின் பங்களிப்பிலும், 50 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கிறது. இவ்வாறு, அவர் கூறினார். இதையடுத்து நடந்த விவாதத்திற்கு பின், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன், சட்ட திருத்த மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us