UPDATED : பிப் 24, 2025 12:00 AM
ADDED : பிப் 24, 2025 10:05 AM

சென்னை:
அரசு பள்ளி மாணவர்கள், 52 பேர், அமைச்சர் மகேஷ் தலைமையில், நேற்று மலேஷியா நாட்டிற்கு, கல்வி சுற்றுலா புறப்பட்டு சென்றனர்.
பள்ளி அளவில், கல்வி மற்றும் இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள், உலக அளவிலும், தேசிய அல்லது மாநில அளவில் புகழ் பெற்ற இடங்களுக்கும், கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
இந்த ஆண்டு, மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற, 52 மாணவர்கள், நான்கு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என, 56 பேர், நேற்று இரவு அமைச்சர் மகேஷ் தலைமையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, மலேஷியா புறப்பட்டு சென்றனர்.
அங்கு புத்திரஜெயா சுற்றுலா, பல்கலை சுற்றுலா, கே.எல்.டவர், கே.எல்.சிட்டி மற்றும் சாக்லேட் மியூசியம், தமிழ் சங்கம் கூட்டம், பட்டு குகை முருகன் கோவில், ஜென்டிங் தீவு போன்ற இடங்களை பார்வையிட உள்ளனர். வரும், 28ம் தேதி சென்னை திரும்ப உள்ளனர்.