UPDATED : செப் 01, 2020 12:00 AM
ADDED : செப் 01, 2020 06:49 AM
சென்னை;
செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிதாக அமைக்கப்பட உள்ள, சாயி பல்கலைக்கு, 600 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்ட, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று, &'வீடியோ கான்பரன்ஸ்&' வாயிலாக, அடிக்கல் நாட்டினார்.
சென்னையில், 2019 ஜனவரி மாதம், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில், செங்கல்பட்டு அடுத்த பையனுாரில், 103.07 ஏக்கர் நிலத்தில், சாயி பல்கலை அமைக்க, தமிழக அரசின் உயர் கல்வித் துறைக்கும், சாயி கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சாயி பல்கலை, முதல் ஏழு ஆண்டுகளில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், 12 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில், 6,000 மாணவர்களுடன், 300 பேராசிரியர்கள், 300 நிர்வாக பணியாளர்களுடன் இயங்கும். இரண்டாம் கட்டமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 30 லட்சம் சதுர அடி கட்டடத்தில், 20 ஆயிரம் மாணவர்கள், 1,000 பேராசிரியர்கள், 1,000 நிர்வாக பணியாளர்களுடன் இயங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று, 600 கோடி ரூபாயில், பிரதான வளாக கட்டடம் கட்ட, சென்னை, தலைமைச் செயலகத்தில், &'வீடியோ கான்பரன்ஸ்&' வழியாக, முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அன்பழகன், பென்ஜமின், தலைமைச் செயலர் சண்முகம், சாயி பல்கலை நிறுவனர் ரமணி கலந்து கொண்டனர்.
