UPDATED : மே 20, 2024 12:00 AM
ADDED : மே 20, 2024 09:19 AM
கோவை:
தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி ஆகிய துறைகளில்,பொறியியல் தொழில்நுட்பக் கல்வி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இன்டஸ்ட்ரி 4.0க்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தும் வகையில், பல்துறை பயிற்சிகளுடன் உயர்தர பொறியியல் கல்வியைவழங்குகிறது, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி,
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் மூலமாக 1994ம் ஆண்டு துவங்கப்பட்ட, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி, கடந்த 30 ஆண்டுகளாக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் வல்லுனர்களை உருவாக்கி உள்ளது.அனுபவமிக்க பேராசிரியர்கள், மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற உள்கட்டமைப்புகள் மற்றும் பாடத்திட்டங்களை மாற்றுதல், நவீன ஆய்வுக்கூடங்கள் உள்ளது.
தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த, இன்னோவேசன் சென்டர் மற்றும் மாணவர்களை தொழில்முனைவோராக உருவாக்க, தனி இன்குபேசன் கட்டமைப்பும் செயல்படுகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.
ஐ.ஐ.டி.,குவாண்டம் கம்யூட்டிங் ஆகிய முன்னணி ஆய்வகங்களுடன் இணைந்து, மாணவர்களுக்கு ஆறு மாத பயிற்சி, பயிற்றுவிக்க ஏதுவாக, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
பல தொழில் நிறுவனங்களின் பி.இ.,ஹான்ஸ் எலக்ட்ரிக் வாகனம், இணைய பாதுகாப்பு, ஆளில்லா வானுார்தி என பல்துறை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
கல்லுாரி வழங்கும் இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்தினால், பொறியியல் துறை படிப்புகளுக்கு நிலையான மற்றும் வளமான எதிர்காலம் அமையும் என்று ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி முதல்வர் தெரிவித்தார்.