UPDATED : அக் 16, 2024 12:00 AM
ADDED : அக் 16, 2024 11:09 AM
சென்னை:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., படிப்பில் சேருவதற்காக, இன்று நடக்க இருந்த நேரடி கலந்தாய்வு, 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதில், மாணவர்களின் விருப்ப கல்லுாரியை தேர்வு செய்வதற்கான நேரடி கலந்தாய்வு, சென்னை, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வி மேம்பாட்டு நிறுவனத்தில், கடந்த 14ல் துவங்கி, 19ம் தேதி வரை நடப்பதாக இருந்தது.
முதல் நாளில், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு, மாற்றுத்திறனாளி, பழங்குடியின மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
சென்னையில் கனமழை பெய்ததால், நேற்று நடக்க இருந்த தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று நடக்க இருந்த கணிதவியல், புவியமைப்பியல், கணினி அறிவியல், மனையியல், பொருளியல் மற்றும் வணிகவியல் பாட மாணவர்களுக்கான கலந்தாய்வு, 22ம் தேதி நடக்கும் என, கல்லுாரி கல்வி கமிஷனர் தெரிவித்துள்ளார்.