தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செயற்கை நுண்ணறிவு மாநாடு மாணவ கண்டுபிடிப்பாளர்களுக்கு பாராட்டு

செயற்கை நுண்ணறிவு மாநாடு மாணவ கண்டுபிடிப்பாளர்களுக்கு பாராட்டு

செயற்கை நுண்ணறிவு மாநாடு மாணவ கண்டுபிடிப்பாளர்களுக்கு பாராட்டு


UPDATED : ஜூலை 11, 2026 05:14 PM

ADDED : ஜூலை 11, 2026 05:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2026 05:14 PM ADDED : ஜூலை 11, 2026 05:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
பிரெஞ்சு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம், பிரெஞ்சு தொழில்முனைவோர் கூட்டமைப்பு சார்பில், கிளாட் செயற்கை நுண்ணறிவு ஒருநாள் மாநாடு நடந்தது.

புதுச்சேரி அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை இயக்குநர் அமன் சர்மா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பன்னீர்செல்வம், மீடியா இன்பர்மேஷன் பீரோவின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜகோபால் சுவாமி சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

பிரெஞ்சு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் அருண்குமார் சாந்தலிங்கம் பேசுகையில், 'இது செயற்கை நுண்ணறிவால் என்ன செய்ய முடியும் என்பதற்கான உரையாடல் மட்டுமல்ல. பிரெஞ்சு மொழி பேசும் நமது இளைய தலைமுறையினர், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எத்தகைய சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கான ஒரு சான்று' என்றார்.

புதுச்சேரியின் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த பிரெஞ்சு மொழி பயிலும் 50 பி.ஏ., மற்றும் எம்.ஏ., மாணவர்கள், ஐப்ரினா நிறுவனத்தின் இப்பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக முடித்தனர். அவர்கள் உருவாக்கிய வணிக மற்றும் சமூக நலன் சார்ந்த கண்டுபிடிப்புகள் குறித்த திட்டங்கள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.

தொடர்ந்து, மாணவர்களின் புதுமையான படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் விஷன் போர்டு கார்னர் திறந்து வைக்கப்பட்டது. சிறந்த 3 வணிக யோசனைகளை முன்வைத்த மாணவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம், பயிற்சியில் பங்கேற்ற 50 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கிளாட் செயற்கை நுண்ணறிவு மூலம் கல்வி சார்ந்த திட்ட அறிக்கை தயார் செய்யும் வழிமுறைகள் குறித்தும் கல்லுாரி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. பிரெஞ்சு தொழில்முனைவோர் கூட்டமைப்பின் நிர்வாகி குணசேகரன் நன்றி கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us