தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கைவினைஞர் பயிற்சி திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

கைவினைஞர் பயிற்சி திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

கைவினைஞர் பயிற்சி திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : செப் 24, 2026 04:59 PM

ADDED : செப் 24, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 04:59 PM ADDED : செப் 24, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ், அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க விரும்புவோர், அக்., 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வரும், 2027ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ், அகில இந்திய தொழிற்தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிகளை www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

தேர்வு கட்டணம், 200 ரூபாயை www.karuvoolam.tn.gov.in மூலம் 'இ-சலான்' செலுத்தி, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

முதல்நிலை எழுத்துத்தேர்வு, கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நவ., 26ம் தேதியும், எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு செய்முறை தேர்வு மறுநாளும் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us