தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிருஷ்ணகிரியில் நாளை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் நாளை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் நாளை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்


UPDATED : செப் 24, 2026 05:00 PM

ADDED : செப் 24, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 05:00 PM ADDED : செப் 24, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நாளை (25ம் தேதி) ராணுவத்தில் ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. முன்னேற்பாடு பணிகளை கோவை ராணுவ ஆட்சேர்ப்பு மைய இயக்குனர் கர்னல் முன்னோளி, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ராணுவ ஆட்சேர்ப்பு மைய இயக்குனர் கர்னல் முன்னோளி நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நாளை முதல் வருகிற அக்., 7 வரை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது.

இதில், ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம். அழைப்பு கடிதம் வரப்பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இம்முகாமில் வருகை புரியும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யும் இடம், ஓட்ட பந்தய சுற்று வட்ட பாதை, தகுதி தேர்வுக்கு தேவையான இட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், டி.எஸ்.பி., ராமச்சந்திரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் நடராஜ முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us