UPDATED : செப் 24, 2026 05:02 PM
ADDED : செப் 24, 2026 05:03 PM
கோவை:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம், நாளை நடக்கிறது.
பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகத்தில் காலை 10:00 முதல் மாலை 02:00 மணி வரை முகாம் நடக்கிறது. முன்னணி நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன.
10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்கள் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. கல்விச்சான்றுகளின் நகல்கள் மற்றும் சுயவிவரத்துடன் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும்.
பங்கேற்க கட்டணம் இல்லை. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. வேலைதேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். 0422 - 2642388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
