UPDATED : ஆக 14, 2024 12:00 AM
ADDED : ஆக 14, 2024 08:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழக அரசின், அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் புதிய உறுப்பினர் செயலராக, விஞ்ஞானி வின்சென்ட் பொறுப்பேற்று உள்ளார்.
சென்னை, கிண்டி சர்தார் படேல் சாலையில் உள்ள, தமிழக மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலராக, விஞ்ஞானி எஸ்.வின்சென்ட் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் ஏற்கனவே, 2007 முதல், 2011 வரை இதே பதவியை வகித்தவர். அப்போது, காப்புரிமை தகவல் மையம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அறிவுசார் சொத்துரிமை உதவி மையம் உள்ளிட்டவற்றை, மத்திய அரசின் உதவியுடன் நிறுவினார்.
மழைநீர் வடிகால் குறித்த ஆய்வுகளை செய்து, தமிழக அரசின் சிறந்த விஞ்ஞானி என்ற பட்டம் பெற்றவர். இவர், லயோலா கல்லுாரியின் டீனாகவும் பணியாற்றி உள்ளார்.