தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை பி.எச்.டி., படிக்கும் பழங்குடியின மாணவருக்கு உதவி

முதுநிலை பி.எச்.டி., படிக்கும் பழங்குடியின மாணவருக்கு உதவி

முதுநிலை பி.எச்.டி., படிக்கும் பழங்குடியின மாணவருக்கு உதவி


UPDATED : மே 30, 2024 12:00 AM

ADDED : மே 30, 2024 09:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2024 12:00 AM ADDED : மே 30, 2024 09:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
வெளிநாடுகளில், முதுநிலை பி.எச்.டி., பயில இருக்கும் பழங்குடியின மாணவர்கள், கல்வி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் (2024-25), வெளிநாடுகளில் முதுநிலை பி.எச்.டி., தொடர தேர்வான, பழங்குடியின மாணவருக்கு, தேசிய ஓவர்சீஸ் கல்வி உதவித்திட்டத்தில், கல்வி உதவி வழங்கப்படுமென, பழங்குடியினர் நல இயக்குனரகம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள், இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள், https://overseas.tribal.gov.in என்ற இணையதளத்தில், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, இணையதளத்தை பார்வையிடலாம். கல்வி நிறுவனங்களின் தகவல் பலகையில், இதுதொடர்பாக அறிவிப்பு செய்யவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us