தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருநங்கையர் கல்வி உதவி விண்ணப்பிக்க அழைப்பு

திருநங்கையர் கல்வி உதவி விண்ணப்பிக்க அழைப்பு

திருநங்கையர் கல்வி உதவி விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : மே 30, 2024 12:00 AM

ADDED : மே 30, 2024 09:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2024 12:00 AM ADDED : மே 30, 2024 09:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
உயர்கல்வி கற்கும் திருநங்கைகள், திருநம்பிகளின் கல்வி மற்றும் இதர கட்டணங்களை முழுமையாக அரசே ஏற்கும் திட்டம், நடப்பு 2024 - 25 நிதியாண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது.

திருநங்கைகள் நலவாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ள, உயர்கல்வி கற்கும் அனைத்து திருநங்கைகள், திருநம்பிகளும் கல்வி உதவித்தொகை பெறலாம். வருமான வரி உச்ச வரப்பு ஏதுமின்றி, பிற உதவித்தொகைகள் ஏதேனும் பெற்றுவந்தாலும், இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

வேறு துறைகள் மூலம் கல்வி உதவித்தொகை பெற்றிருப்பின், அந்த தொகைதவிர மீத தொகையை இந்த திட்டத்தில் பெறலாம். திருப்பூர் மாவட்டத்தில் உயர்கல்வி கற்கும் திருநங்கை, திருநம்பிகள், உரிய ஆவணங்களுடன், திருப்பூர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி, உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us