கண்டுபிடிப்புகளில் புதுமை ஸ்ரீசாய்ராம் குழுமத்திற்கு விருது
கண்டுபிடிப்புகளில் புதுமை ஸ்ரீசாய்ராம் குழுமத்திற்கு விருது
UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 08:55 AM
சென்னை:
இண்டலக்ட் மற்றும் ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் நிறுவனம் சார்பில், இந்திய அளவில் புத்தாக்க கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் தேசிய மாநாடு, தாம்பரத்தில் நடந்தது.
இதில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் தலைவர் சீத்தாராம் பங்கேற்றார். புத்தாக்க கண்டுபிடிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் சிறந்த கல்வி நிறுவனங்களான விருதை, சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லுாரி மற்றும் ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளிட்ட ஐந்து உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் பேசுகையில், ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் நிறுவனம் நவீன தொழில்நுட்ப அறிவாற்றலை கற்றுத் தருவதில் சிறந்து விளங்குகிறது. வடிவமைப்பு சிந்தனை பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பதுடன், புதுமைக்கான புதிய வாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கித் தருகிறது, என்றார்.
விருது பெற்ற ஸ்ரீசாய்ராம் கல்விக்குழும தலைவர் சாய்பிரகாஷ் லியோ முத்து பேசுகையில், ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லுாரியில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு பொறியியல் படிப்புடன், முதல் ஆண்டில் இருந்தே ஏதேனும் ஒரு புத்தாக்க கண்டுபிடிப்பு நடவடிக்கையில் ஈடுபட ஊக்குவிக்கிறோம். கல்லுாரி நிர்வாகம் ஒருங்கிணைந்து கடுமையாக உழைத்து வருகிறோம் என்றார்.
இதில், இன்டலெக்ட் நிர்வாக இயக்குனரும், ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் நிறுவனருமான அருண் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புது கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் கல்வி நிறுவனத்திற்கான விருதை, ஸ்ரீசாய்ராம் கல்விக்குழும தலைவர் சாய்பிரகாஷ் லியோ முத்துவுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தலைவர் டி.ஜி.சீத்தாராம் வழங்கினார்.