ஊட்டி அரசு கலை கல்லுாரியில் பிளிட்ஜ் - 24 தொழில்நுட்ப போட்டி
ஊட்டி அரசு கலை கல்லுாரியில் பிளிட்ஜ் - 24 தொழில்நுட்ப போட்டி
UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 08:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:
ஊட்டி அரசு கலை கல்லுாரியில் கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் எம்.சி.ஏ., துறை, மின்னணுவியல் துறை சார்பில் பிளிட்ஜ் - 24 தொழிநுட்ப போட்டி நடந்தது.
அதில், பிராவிடன்ஸ் கல்லுாரி சி.எஸ்.ஐ., இன்ஜினியரிங் கல்லுாரி, கோவை பாவை இன்ஜினியரிங் கல்லுாரி உட்பட, பல்வேறு கல்லுாரிகளில் இருந்து, மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, பிராவிடன்ஸ் கல்லுாரி மாணவியர் தட்டி சென்றனர். நிகழ்ச்சியை கல்லுாரி முதல்வர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இறுதியில் கம்ப்யூட்டர் அறிவியல் துறையினர் நன்றி கூறினார்.