தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு


UPDATED : மார் 08, 2026 01:45 PM

ADDED : மார் 08, 2026 01:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 08, 2026 01:45 PM ADDED : மார் 08, 2026 01:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கெலமங்கலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் (தமிழ் வழி), வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கி நடந்து வருகிறது.

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்கள், சீருடை, கல்வி உபகரணங்கள் குறித்து எடுத்துரைத்து, நேற்று தீவிர மாணவர் சேர்க்கை பேரணி மேற்கொள்ளப்பட்டது. பள்ளி நிர்வாகம் மற்றும் ஓசூர் வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் நடந்த பேரணியில், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

பள்ளி தலைமையாசிரியர் அருள்கலா ராணி தலைமை வகித்தார். கெலமங்கலம் பஸ் ஸ்டாண்ட் உட்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது. எல்.கே.ஜி., யு.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்பில் மொத்தம், 30 மாணவ, மாணவியர் புதிதாக சேர்ந்தனர். அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்று, எழுது பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us